Jan 16, 2011

தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் & தடுக்கும் வழிகள்

தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் & தடுக்கும் வழிகள்
ஒரு மனிதன் உணவு இல்லாமல் ஒரு மாதம் இருக்க முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு வாரம் கூட வாழ முடியாது. இதுவே வாழ்க்கைக்கும் தண்ணீருக்கும் உள்ள பிரிக்க முடியாத பந்தத்தை நமக்கு விளக்குகிறது.
ஒரு சராசரி மனிதன் தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீரை உடலிலிருந்து வெளியேற்றுகிறான். உடலிலிருந்து தண்ணீர் வெளியேறும் அளவுக்குத் தக்கபடி அவனுடைய உடல் தண்ணீரை எதிர்பார்க்கும், அதை மனதில் கொண்டு சுத்தமான தண்ணீரை குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நாம் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் போது நம்முடைய உடலிலுள்ள செல்கள் தண்ணீரின் தேவைக்காக இரத்தத்தை நாடுகின்றன. உடனே இதயம் வேகமாகத் துடிக்கத் துவங்குகிறது.
இதனால் சிறுநீரகம் தன்னுடைய பணியான இரத்தத்தைத் தூய்மையாக்கும் செயலை முழுமையாகச் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது. எனவே சிறுநீர கத்தின் பணிகள் லிவர் போன்ற மற்ற உறுப்புகளுக்குத் தாவுகின்றன. உடலே ஒரு அழுத்தமான சூழலுக்குத் தள்ளப்படுகிறது.
இத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு என்னவென்று நினைக்கிறீர்கள் ? தீர்வு, மிக மிகச் சுலபம். சுத்தமான தண்ணீரை அவ்வப்போது அருந்தி வருதல் ! அவ்வளவே.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பது பெரும்பாலான நோய்களைக் குணமாக்கும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா ?
* காலையில் எழுந்தவுடன் உடனடியாக, பல் தேய்ப்பதற்கு முன்பே, ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
நாம் தினமும் பருகும் குடிநீர் சுத்தமானதாக இல்லையென்றால், நமக்கு நாமே பல வியாதிகளுக்கு அடித்தளம் போட்டுக் கொள்கிறோம் என்று அர்த்தம்.
நீரினால் ஏற்படும் நோய்களை (Water borne diseases) நான்கு வகையாக பிரிக்கலாம்
  • Water Dispersed Diseases Borne – நீரினால் பரவும் பிணிகள். உதாரனம் காலரா
  • Water Based Diseases – நீரை அடிப்படையாக கொண்ட பிணிகள் : இந்த நோய் ஏற்படுத்தும் கிருமியின் வாழ்க்கை சுழற்சியின் ஒரு பகுதி நீரில் இருக்கும். உதாரணம்: நரம்புச்சிலந்தி
  • Water related Diseases  – நீருடன் தொடர்புடைய பிணிகள் இந்த நோயை பரப்பும் கிருமி இருக்கும் / வளரும் பூச்சிகள் நீரில் இருப்பதால் உதாரணம் மலேரியா, சிக்குன்குனியா
  • Water Washed Diseases- நீர் பற்றாக்குறையால் ஏற்படும் பிணிகள் -தண்ணீர் பற்றாக்குறையால் தனிமனித சுகாதாரம் பேண முடியாததால் ஏற்படும் நோய்கள் . உதாரணங்கள் – Trachoma, Scabies, Typhus, Ring worm (படர்தாமரை)
நீரினால் பரவும் பிணிகள் பரவுவதற்கு முக்கிய காரணம், மனித மலம் குடிநீரில் கலந்து விடுவது தான், காலரா மட்டுமல்ல, டைபாய்டு, போலியோ, கல்லீரல் அழற்சி வகை A (Hepatitis Virus Type A) போன்ற பல நோய்கள் இப்படி தான் பரவுகின்றன
இதில் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற பிணிகள் மரணத்தை ஏற்படுத்தக்கூடியவை
இது போன்ற நீரினால் பரவும் நோய்களை தடுக்கும் வழிகள்
1.        மலம் குடிநீரில் கலக்காமல் தடுப்பது திறந்த வெளிகளில் மலம் கழிக்காமல் இருப்பது. அனைவரும் நவீன கழிவறைகளை உபயோகிப்பது. இதனால் தான் அரசு கழிவறை கட்ட நிதியுதவி அளிக்கும் திட்டமெல்லாம் வைத்திருக்கிறது
2.        கழிவு நீரும் குடிநீரும் கலக்காமல் தடுப்பது - குடிநீர் வடிகால் வாரியத்தின் பணி
3.        நீரில் குளோரின் கலப்பது நகராட்சி / குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி. உங்கள் பகுதியில் இருக்கும் மேல் நிலை நீர் தேக்க தொட்டியில் தினமும் குளோரின் கலக்கப்பட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா ?? அந்த குறைந்த பட்சம் வாரம் ஒரு முறை 
4.        நீரை காய்ச்சி, வடிகட்டி பருகுவது - நீங்கள் செய்யவேண்டியது
5.        கைகளை நன்றாக கழுவ வேண்டியது இதுவும் நீங்கள் செய்ய வேண்டியதுதான் 

தண்ணீரை காய்ச்சிக் குடிப்பதன் தேவை குறித்தும், தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் குறித்தும் நம்மிடம் விவரிக்கிறார், சென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டர் எஸ். அமுதகுமார்.
குடிக்கப் பயன்படுத்தும் தண்ணீர் சுத்தமானது தானா? கிருமிகளற்றதா? என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. எனவே தண்ணீரை எப்போதும் காய்ச்சி, வடிகட்டி உபயோகப்படுத்த வேண்டும்.
நகரப் புறங்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் குடிநீர் மூலம் நிறைய நோய்கள் பரவுகின்றன. மேல்நிலை நீர்த் தொட்டிகள் மாதக் கணக்கில் சுத்தப்படுத்தப்படாமல் இருக்க வாய்ப்புண்டு.     எனவே அதை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
உடலில் ஏற்படும் நோய்களில் 75 சதவீதம் குடி தண்ணீரால் தான் வருகிறது.
வாந்தி, பேதி, டைபாயிடு, காலரா போன்றவை தண்ணீர் மூலம் தான் பரவுகின்றன.
ஐஸ் தண்ணீர் குடிக்க விரும்புவர்கள், காய்ச்சிய நீரை குளிர்ப் பதனப் பெட்டியில் வைத்து  பயன்படுத்த வேண்டும். தண்ணீரை வெறுமனே சூடு படுத்திக் குடிக்காமல், நன்கு கொதிக்க வைத்தால் தான், அதிலுள்ள கிருமிகள் மடியும்.
குடிநீர் தான் மனித உடலின் ஆதாரம். அந்த நீரை காய்ச்சிக் குடித்து  நம்மை பழக்கப்படுத்திக் கொண்டு நோய்களில் இருந்து விடுதலை பெறுவோம்.

Water Borne Diseases and Prevention Methods

0 comments:

Post a Comment