சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றம் சார்பில் இம்மாதம் 16ஆம் தேதியன்று காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடத்தப்படவுள்ள கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. ஹாஜி அஹ்மத் ஹுஸைன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர்களான செய்யித் முஹம்மத் புகாரீ, செய்யித் ஹஸன், செயற்குழு முன்னாள் உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.ராஜிக் ஆகியோர், இக்ராஃ செயலர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மதுடன் கலந்தாலோசனை செய்தனர். ![]() நடைபெற்ற இக்கூட்டத்தில், நிகழ்ச்சி ஏற்பாடுகள் பட்டியலிடப்பட்டு, அவற்றுக்கான பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இக்ராஃ உறுப்பினரும், காயல்பட்டினம் ஐ.ஐ.எம்.பைத்துல்மால் அமைப்பின் பொருளாளருமான ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ் உடனிருந்தார். |
![]() |
Jan 12, 2011
தம்மாம் கா.ந.மன்றத்தின் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி: பொறுப்புகள் பகிர்ந்தளிப்பு!
தம்மாம் கா.ந.மன்றம் நடத்திய மஞ்சள் காமாலை தடுப்பூசி முகாம்! 605 பேர் பலன் பெற்றனர்!!
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட மஞ்சள் காமாலை நோய் தடுப்பூசி இலவச முகாமின் மூலம் 605 பேர் பயன் பெற்றுள்ளனர்.
சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், 19.09.2010 அன்று மஞ்சள் காமாலை நோய் (Hepatitis - B) தடுப்பூசி இலவச முகாம் நடத்தப்பட்டது.

காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, கே.டி.எம். தெருவிலிருக்கும் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) ஆகிய இடங்களிலும், அன்று காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், பின்னர் மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரையிலும் இத்தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட இம்முகாமில், பிறந்த குழந்தை முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்-சிறுமியருக்கான இத்தடுப்பூசி இலவச முகாமின் மூலம் 605 பேர் பயன் பெற்றுள்ளனர். அவர்களுள், முதற்கட்டமாக 300 பேருக்கும், இரண்டாம் - மூன்றாம் கட்டமாக 15 பேருக்கும், ஏற்கனவே தடுப்பூசி போட்டு ஐந்து வருடங்களானவர்கள் பூஸ்டர் முறையில் 290 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

எதிர்பார்த்ததை விடவும் பயனாளிகளின் கூட்டம் அதிகமானதால் அனைவருக்கும் முழுமையாக முகாமில் தடுப்பூசி போட இயலவில்லை எனவும், அவர்களுக்கு வெகுவிரைவிலோ அல்லது அடுத்து தாங்கள் முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ள அக்டோபர் 17ஆம் தேதியன்றோ தடுப்பூசி போடப்படும் என முகாம் ஏற்பாட்டாளர்களான எம்.எம்.செய்யித் இஸ்மாஈல் தெரிவித்துள்ளார்.
அரபிய்யா.

Dammam Kayal Patnam Welfare Association Vaccination Phase I
நாளை (அக்டோபர் 17) தம்மாம் கா.ந.மன்றத்தின் இரண்டாம் கட்ட மஞ்சள் காமாலை தடுப்பூசி இலவச முகாம்!
சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் நாளை (அக்டோபர் 17) ஞாயிற்றக்கிழமையன்று இரண்டாம் கட்ட மஞ்சள் காமாலை தடுப்பூசி இலவச முகாம் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், கடந்த செப்டம்பர் 19 அன்று முதற்கட்ட மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டது அனைவரும் அறிந்ததே.
இன்ஷாஅல்லாஹ் நாளை (அக்டோபர் 17) ஞாயிற்றக்கிழமையன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரையில் இரண்டாம் கட்ட மஞ்சள் காமாலை (Hepatitis B) தடுப்பூசி முகாம் எல்.கே. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்படவுள்ளது.
இம்முகாமில் சென்ற மாதம் ஊசிப்போட்டுக்கொண்டவர்கள் தவறாது மீண்டும் ஊசிப்போட்டுக்கொள்ள வரும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள். மருந்து மீதமிருந்தால், மதியம் 01.00 மணிக்கு மேல் பூஸ்டர் ஊசிப்போடப்படும்.
விபரங்களுக்கு:-
+91 78454 21382
+91 99628 38128 begin_of_the_skype_highlighting +91 99628 38128 end_of_the_skype_highlighting
ஆகிய கைபேசி எண்களை தொடர்புகொள்ளவும்.
இச்செய்தியைப் பார்த்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டு - வெளியூர் காயலர்கள் தமது இல்லங்களுக்கு இன்றே தகவல் தெரிவித்து இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முகாம் குறித்து டி.வி. விளம்பரங்கள் மூலமும், தொலைபேசி மூலமும் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.
தகவல்:
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக,
செய்யது ஹஸன்,
தம்மாம், சஊதி அரபிய்யா.

தம்மாம் கா.ந.மன்றத்தின் மஞ்சள் காமாலை இரண்டாம் கட்ட தடுப்பூசி இலவச முகாம்! 149 பேர் பயன்பெற்றனர்!!
சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், 17.10.2010 ஞாயிற்றக்கிழமையன்று மஞ்சள் காமாலை (Hepatitis B) தடுப்பூசி இரண்டாம் கட்ட இலவச முகாம் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் 149 குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தின் அனுமதியுடன் நடத்தப்பட்ட இம்முகாமில், டாக்டர் ஜாஃபர் ஸாதிக் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தார். காயல்பட்டினம் மவ்லானா க்ளினிக் செவிலியர் உதவிப் பணிகளை மேற்கொண்டனர். ![]() காயாமொழி ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் முகாமை ஒருங்கிணைத்தனர். தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி அஹ்மத் ஹுஸைன், செய்யித் முஹம்மத் புகாரீ, செய்யித் ஹஸன் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ![]() |
தம்மாம் கா.ந.மன்றத்தின் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி! மாணவ-மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு!!
“சிறகுகளை விரியுங்கள்!” என்ற தலைப்பில், சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியர் கலந்துகொள்ளும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி, காயல்பட்டினம் ஜலாலிய்யாஹ் நிக்காஹ் மஜ்லிஸில், 16.10.2010 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. ![]() சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர் ஹாஃபிழ் அப்துல் காதிர் வாஃபிக் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் செய்யித் ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி ஏ.ஆர்.தாஹா மன்றத்தின் சேவைகள் குறித்து சுருக்கவுரையாற்றினார். ![]() அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான இளையாங்குடி டாக்டர் ஜாகிர் ஹுஸைன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் எஸ்.ஆப்தீன், “சிறகுகளை விரியுங்கள்” என்ற தலைப்பில், அசைபட உருப்பெருக்கி துணையுடன் மாணவ-மாணவியருக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார். ![]() ![]() இந்நிகழ்ச்சி நடைபெறுவது பற்றிய அறிவிப்புகள் அடங்கிய பிரசுரத்தில் கேட்கப்பட்டிருந்த சில கேள்விகளுக்கு சிறந்த கருத்துக்களைத் தந்தவர்களின் கருத்துப் பதிவுகள் தனியே பிரித்தெடுக்கப்பட்டு, அவற்றுள் மாணவர்கள் புறத்திலிருந்து 5 கருத்துக்களும், பெண்கள் மாணவியர் புறத்திலிருந்து 5 கருத்துக்களும் பரிசுக்குரியனவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள், ஹாங்காங் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா, ஐ.ஐ.எம். பைத்துல்மால் பொருளாளர் ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ், இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், முஹம்மத் ஃபாஸில் உள்ளிட்டோரால் வழங்கப்பட்டன. ![]() ![]() சிறப்பு விருந்தினருக்கு தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் நினைவுப பரிசு வழங்கப்பட்டது. ஹாஜி அஹ்மத் ஹுஸைன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனரும், இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைச் செயலாளருமான எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் 10ஆம், 11ஆம், 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியர், சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்டீஃபன் ஆகியோரும், அனைத்துப்பள்ளிகளின் ஆசிரியர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() நிகழ்ச்சி ஏற்பாடுகளை, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் தலைமையில், தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அஹ்மத் ஹுஸைன், செய்யித் முஹம்மத் புகாரீ, செய்யித் ஹஸன், ஹம்ஸா இஸ்மாயீல் உள்ளிட்டோர் செய்திருந்தனர். |
.தம்மாம் கா.ந.மன்றம் நடத்திய மஞ்சள் காமாலை
தம்மாம் கா.ந.மன்றம் நடத்திய மஞ்சள் காமாலை 

தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட மஞ்சள் காமாலை நோய் தடுப்பூசி இலவச முகாமின் மூலம் 605 பேர் பயன் பெற்றுள்ளனர்.
சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், 19.09.2010 அன்று மஞ்சள் காமாலை நோய் (Hepatitis - B) தடுப்பூசி இலவச முகாம் நடத்தப்பட்டது.
காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, கே.டி.எம். தெருவிலிருக்கும் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) ஆகிய இடங்களிலும், அன்று காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், பின்னர் மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரையிலும் இத்தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட இம்முகாமில், பிறந்த குழந்தை முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்-சிறுமியருக்கான இத்தடுப்பூசி இலவச முகாமின் மூலம் 605 பேர் பயன் பெற்றுள்ளனர். அவர்களுள், முதற்கட்டமாக 300 பேருக்கும், இரண்டாம் - மூன்றாம் கட்டமாக 15 பேருக்கும், ஏற்கனவே தடுப்பூசி போட்டு ஐந்து வருடங்களானவர்கள் பூஸ்டர் முறையில் 290 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
எதிர்பார்த்ததை விடவும் பயனாளிகளின் கூட்டம் அதிகமானதால் அனைவருக்கும் முழுமையாக முகாமில் தடுப்பூசி போட இயலவில்லை எனவும், அவர்களுக்கு வெகுவிரைவிலோ அல்லது அடுத்து தாங்கள் முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ள அக்டோபர் 17ஆம் தேதியன்றோ தடுப்பூசி போடப்படும் என முகாம் ஏற்பாட்டாளர்களான எம்.எம்.செய்யித் இஸ்மாஈல்
தெரிவித்துள்ளார்
Dammam Kayal Welfare Association Hepatisis B Phase II Vaccination Program
Saturday, October 9 தம்மாம் காயல் நற்பணி மன்றம் நடத்தும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
Saturday, October 9
தம்மாம் காயல் நற்பணி மன்றம் நடத்தும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகதுஹு,
இன்றைய உலகில் கல்வி மிகவும் இன்றியமையான ஒன்றாக உள்ளது. அதுவும் மிகவும் போட்டி நிறைந்த களமாக உள்ள நிலையில் நம் மாணவ மாணவிகளுக்கு கல்வியில் விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 16ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸில் வைத்து தம்மாம் காயல் நற்பணி மன்றம் சார்பில் மாபெரும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நம் மாணவ மாணவியற்களுக்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
நம் மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையோடு தலைநிமிர ஓர் அரிய வாய்ப்பு. கல்வியில் கடைநிலையிலிருக்கும் நம் சமுதாயத்து மாணவர்களிடையே கல்வித்தாகம் உண்டாக்கும் அரிய நிகழ்ச்சி.
கல்வி மேல் உள்ள அலட்சியப் போக்கை மாற்றியமைக்கும் அற்புத கருத்தரங்கம்.
படிப்பில் ஆர்வமில்லாதவர்களைப் படிக்கத் தூண்டி மேற்படிப்புக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி.
சாமன்ய மாணவர்களையும் தன்னம்பிக்கையுடன் சாதிக்கத் தூண்டும் நிகழ்ச்சி.
நம் மாணவர்களின் திறமை, ஆர்வம், மனநிலை மற்றும் பொருளாதார பின்னனிகளுக்கேற்ப மேற்படிப்புகள் குறித்த தெளிவான விளக்கம்.
"சிறகுகளை விறியுங்கள்"
(வெண்பட விளக்கங்களுடன்.... உங்களைத் தேடி ....)
நிகழ்ச்சி தொகுப்பாளர்: முனைவர் S. ஆபிதீன் அவர்கள்
(பேராசிரியர் , Dr.Zakir Hussain College, Ilayangudi)
மற்றும்
ஆசிரியர் அபுதாகிர் அவர்கள்
இந்த நிகழ்ச்சியில் 10,11,12 படிக்கும் மாணவ மாணவியர்கள் அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
இவண்:
தம்மாம் காயல் நற்பணி மன்றம்.
கீழ்க்கண்ட வினாக்களுக்கு சரியான பதில் எழுதி நிகழ்ச்சிக்கு வரும் போது கையோடு கொண்டு வந்து பெட்டியில் போடுபவர்காளில் 10 பேர் தேர்ந்தெடுக்கபெற்று வெகுமதியான பரிசுகள் வழங்கப்படும்.
(1) To get into which institutions, JEE test is held ?
(a) IITs (b) IIMs (c) Anna University
(2) To get into which institutions, CAT examination is held ?
(a) IITs (b) IIMs (c) Anna University
(3) To join NITs, you will be taking which of the following tests?
(a) GRE (b) AIPMT (c) AIEEE
After my plus two exams, I want to become (in less than 100 words)
..........................................................................................................

Invitation Notice Dammam Kayal Welfare Association Educational Program Jalaliya
தம்மாம் காயல் நற்பணிமன்றம் - சிறகுகளை விறியுங்கள்

தகவல்.
J.செய்யது ஹசன்
தம்மாம் காயல் நற்பணி மன்றம்.
புகைப்படங்கள்.
K.S.மூஸா
ஹாஜி அப்பா தைக்கா தெரு.
தம்மாம் காயல் நற்பணி மன்றம் செயற்குழு நிகழ்வுகள்!
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், உதவி கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:- சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 57ஆவது செயற்குழுக் கூட்டம், 15.10.2010 வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணி அளவில் மன்றத் தலைவர் டாக்டர் இத்ரீஸ் அவர்களின் அல்ஃகபர் இல்லத்தில் நடைபெற்றது. சகோதரர் அப்துல் காதர் (சூபி) கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். ![]() நிதி ஒதுக்கீடு: உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்ட புதிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சகோதர மன்றங்களில் இருந்து கூடுதல் உதவிகளுக்காக மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. புதிய செயற்குழு உறுப்பினர்: புதிய செயற்குழு உறுப்பினராக சகோதரர் M.M.முஹம்மது ஹசன் (Computer Programmer ) இணைக்கப்பட்டு, தகவல் தொடர்புகளுக்கான எல்லாப் பணிகளுக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அடுத்த பொதுக்குழுக் கூட்டம்: மன்றத்தின் 57ஆவது பொதுக்குழுக் கூட்டத்தை, இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 05ஆம் தேதி வெள்ளிகிழமையன்று, சகோதரர் நவ்பல் இஸ்மாயில் இல்லத்தின் உள்ளரங்கில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. மன்றத்தின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். அனைவருக்கும் தேநீர் - சிற்றுண்டி வழங்கப்பட்டு, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. ![]() இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்: M.M.முஹம்மது ஹசன் அல்கோபர், சஊதி அரபிய்யா. |
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 57வது பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள்!
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 57வது பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள்!
நவம்பர் 5 வெள்ளியன்று மாலை தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 57வது பொதுக்குழு கூட்டம் நவ்பல் இஸ்மாயில் அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர். அம்மன்ற சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு :-

தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 57வது பொதுக்குழு கூட்ட நிகழ்வுகளை சகோதரர் அப்துல் காதர் சூபி கிராஅத் ஓதி துவக்கி வைக்க, சகோதரர் ஷாதுலி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து மன்ற தலைவர் டாக்டர் முஹம்மது இத்ரீஸ் அவர்கள் முன்னுரை வழங்கினார்.

தலைவருக்கே உரித்தே நடையில் இறுதியில் பேசப்படும் நன்றி அறிவித்தலை முற்படுத்தி, பொதுக்குழுவின் சிறப்புக்கு உதவி புரிந்தவர்களுக்கும், உணவுக்கு உறுதுணையாய் நின்றவர்களுக்கும் நன்றி கூறினார். தங்களின் இல்லங்களில் புதியதாய் குழந்தைச் செல்வங்களின் வரவால் மகிழ்ந்திருக்கும் பெற்றோருக்கு வாழ்த்து கூறியும், அவர்களுக்காக எல்லோர் சார்பிலும் தலைவர் துஆ செய்தார். மிக முக்கியமாக, நமதூரில் நிலவி வரும் "தலைப்பிரசவத்தின் செலவுகள் பெண்ணின் தாய் வீட்டோடுதான்" என்ற மிகப்பழமையான, நிறுத்தப்பட வேண்டிய மோசமான பழக்கத்தை கடுமையாக சாடினார். இளைஞர்கள் முனைந்தால் இம்மூட வழக்கத்துக்கு மூடி போட்டு முடிவு கட்டலாம் என்று வலியுறுத்தினார்.
அடுத்து பொதுச்செயலாளர் அஹமது ரபீக் அவர்கள் 56வது பொதுக்குழுவுக்குப் பின்பு வழங்கப்பட்ட உதவிகள் குறித்தும், மன்றம் சார்பில் ஊரில் நடத்தி முடித்த சமுதாய நல நிகழ்வுகள் பற்றியும் விளக்கமாக உரையாற்றினார்.

தொடர்ந்து சகோதரர் ஹஸன் ஜாபர் அவர்கள் சமீபத்தில் மன்றம் சார்பில் தானும், செயலர் ரபீக், சகோதரர் புஹாரி மற்றும் சகோதரர் இஸ்மாயில் ஆகியோர் இணைந்து வெற்றிகரமாக நடத்தி முடித்த கல்வி விழிப்புணர்வு முகாம், சிதிலமடைந்த வீடுகளைச் செப்பணிட்டு வழங்கிய திட்டம் (5 வீடுகள்), மருத்துவ முகாம் (HEPATITIS - B - VACCINATION இலவச தடுப்பூசி) ஆகியன குறித்து முழு விபரங்களையும் வழங்கினார்.

இடைவேளையில் இனிப்பு, கார வகைகளுடன் கறிக்கஞ்சி வழங்கப்பட்ட பிறகு அல்கோபர், தம்மாம் பகுதிகளுக்கு பணியில் இணைந்திருக்கும் புதிய உறுப்பினர்களின் அறிமுகம் நடைபெற்றது.

தொடர்ந்த கருத்துப் பரிமாற்ற நிகழ்வில் சகோதரர் மீரான் அவர்கள் நமதூரில் நிகழ்ந்த சில வெறுக்கத்தக்க ஒழுங்கீனங்களைப் பற்றி மிக வருத்தத்துடனும், சமூக அக்கறையுடன் எடுத்துரைத்து அதனை ஒழித்துக் கட்டும் வழிவகைகளையும் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இறுதியில் துஆ வுடன், இரவு உணவு (எடுத்து செல்லும் வகையில்) வழங்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
தகவல் மற்றும் புகைப்படங்கள்:
M.M. முஹம்மது ஹஸன்

Subscribe to:
Posts (Atom)