சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், 17.10.2010 ஞாயிற்றக்கிழமையன்று மஞ்சள் காமாலை (Hepatitis B) தடுப்பூசி இரண்டாம் கட்ட இலவச முகாம் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் 149 குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தின் அனுமதியுடன் நடத்தப்பட்ட இம்முகாமில், டாக்டர் ஜாஃபர் ஸாதிக் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தார். காயல்பட்டினம் மவ்லானா க்ளினிக் செவிலியர் உதவிப் பணிகளை மேற்கொண்டனர். காயாமொழி ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் முகாமை ஒருங்கிணைத்தனர். தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி அஹ்மத் ஹுஸைன், செய்யித் முஹம்மத் புகாரீ, செய்யித் ஹஸன் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். |
Jan 12, 2011
தம்மாம் கா.ந.மன்றத்தின் மஞ்சள் காமாலை இரண்டாம் கட்ட தடுப்பூசி இலவச முகாம்! 149 பேர் பயன்பெற்றனர்!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment