Jan 12, 2011

தம்மாம் கா.ந.மன்றத்தின் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி: பொறுப்புகள் பகிர்ந்தளிப்பு!

சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றம் சார்பில் இம்மாதம் 16ஆம் தேதியன்று காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடத்தப்படவுள்ள கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

ஹாஜி அஹ்மத் ஹுஸைன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர்களான செய்யித் முஹம்மத் புகாரீ, செய்யித் ஹஸன், செயற்குழு முன்னாள் உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.ராஜிக் ஆகியோர், இக்ராஃ செயலர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மதுடன் கலந்தாலோசனை செய்தனர்.



நடைபெற்ற இக்கூட்டத்தில், நிகழ்ச்சி ஏற்பாடுகள் பட்டியலிடப்பட்டு, அவற்றுக்கான பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இக்ராஃ உறுப்பினரும், காயல்பட்டினம் ஐ.ஐ.எம்.பைத்துல்மால் அமைப்பின் பொருளாளருமான ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ் உடனிருந்தார்.

0 comments:

Post a Comment