தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், உதவி கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:- சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 57ஆவது செயற்குழுக் கூட்டம், 15.10.2010 வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணி அளவில் மன்றத் தலைவர் டாக்டர் இத்ரீஸ் அவர்களின் அல்ஃகபர் இல்லத்தில் நடைபெற்றது. சகோதரர் அப்துல் காதர் (சூபி) கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நிதி ஒதுக்கீடு: உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்ட புதிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சகோதர மன்றங்களில் இருந்து கூடுதல் உதவிகளுக்காக மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. புதிய செயற்குழு உறுப்பினர்: புதிய செயற்குழு உறுப்பினராக சகோதரர் M.M.முஹம்மது ஹசன் (Computer Programmer ) இணைக்கப்பட்டு, தகவல் தொடர்புகளுக்கான எல்லாப் பணிகளுக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அடுத்த பொதுக்குழுக் கூட்டம்: மன்றத்தின் 57ஆவது பொதுக்குழுக் கூட்டத்தை, இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 05ஆம் தேதி வெள்ளிகிழமையன்று, சகோதரர் நவ்பல் இஸ்மாயில் இல்லத்தின் உள்ளரங்கில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. மன்றத்தின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். அனைவருக்கும் தேநீர் - சிற்றுண்டி வழங்கப்பட்டு, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்: M.M.முஹம்மது ஹசன் அல்கோபர், சஊதி அரபிய்யா. |
Jan 12, 2011
தம்மாம் காயல் நற்பணி மன்றம் செயற்குழு நிகழ்வுகள்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment